மனிதனின் உடலில் உள்ள உறுப்புக்கள் இயங்குவதற்கும் உடலின் சில அத்தியாவசிய தேவைகளுக்கும் கொழுப்பு சத்து அவசியம். நாம் உண்ணும் பல வகையான உணவுகளில் இந்த கொழுப்பு சத்து அதிகமுள்ளது. இந்த கொழுப்பு ஒருவரின் உடலில் அளவுக்கதிகமாக சேர்ந்து விட்டால் பல நோய்களை ஏற்படுத்தும். அதில் ஒன்று தான் உடலின் தோலுக்கு அடியில் ஏற்படும் கொழுப்பு கட்டி. இதற்கு உடனடி பலன் தரும் மருந்துகள் இல்லையென்றாலும் நாம் சில சித்த வைத்திய முறைகளை கடைபிடிப்பதால் இக்கட்டிகளை போக்கலாம்.

கொழுப்பு கட்டி அறிகுறிகள்

உடலில் ஆங்காங்கே தோலுக்கு அடியில் சிறு சிறு வீக்கங்கள் ஏற்பட்டு சில நாட்களில் கட்டிகளாகும். ஒரு சிலருக்கு இக்கட்டிகளை தொடும் போது சிறிது வலியிருக்கும்.

கொழுப்பு கட்டி குணமாக குறிப்புகள்

பல வைட்டமின் சத்துக்களையும் அமில தன்மையும் கொண்டது ஆரஞ்சு பழம். இந்த பழ சுளைகளை அவ்வப்போது மென்று தின்று வருவதால் உடலில் சேரும் கொழுப்புகளை கரைத்து கொழுப்பு கட்டிகளை நீக்கும். விதையுள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும்.

கல்லுப்பு ஒத்தடம்

ஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் அந்த முடிப்பை தோய்த்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வர கொழுப்பு கட்டிகள் கரையும்.

கொடிவேலி தைலம்

கொடிவேலி என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகும். இந்த மூலிகையால் செய்யப்பட்ட தைலம் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி நம் உடலில் கொழுப்பு கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.

உண்ணா நோன்பு

வாரம் ஒரு வேளை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பதால் உடலில் உள்ள ரத்தம் மற்றும் திசுக்களில் கொழுப்பு சேராமல் தவிர்த்து இது போன்ற கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும்.

உடற்பயிற்சி

சாப்பிட்ட உடனேயே சிலர் உடலியக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதாலும், உறங்குவதாலும் அவர்களின் உடலில் அவர்கள் சாப்பிட்ட உணவகளிலுள்ள கொழுப்புகள் அவர்களின் உடல் திசுக்களில் சேர்வதால் இப்படிப்பட்டவர்களுக்கு கொழுப்பு கட்டிகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே அவ்வப்போது உடலியக்கம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வதால் இக்கொழுப்பு கட்டிகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment