Health TipsSri Selvam - Ayurveda Treatment in Chennai

மர்ம & விஷ காய்ச்சல் ஏன் வருகிறது ?

வைரஸ் (தொற்றி கொள்ளகூடிய & நமது நோய் எதிர்ப்பு சக்தி நமக்கே பாதகமாக மாற்றக்கூடிய பயங்கர வைரஸ்)

இந்த வைரஸ் வரக்காரணம் என்ன ?
சுத்தமில்லா குடிநீர் (சாக்கடை நீர் கலந்து விட்ட அல்லது கலப்படமானதண்ணீர்,மழை நாளில் கொதிக்க வைக்காமல் பருகப்படும் நீர் ) சுகாதரமற்றசூழ்நிலைகள் (தேங்கிய சாக்கடை,குட்டை நீர்,கொசுக்களின் உற்பத்தி
செய்யகூடிய விஷயங்கள் ,சுத்தமில்லா வீடு,குப்பைகளின் சேர்மானங்கள் ) பருவநிலையில் திடீர் மாற்றங்கள் -அதிக குளிர்,அதிக மழை,அதிக பனி போன்ற விஷயங்கள் இந்த வைரஸ் பரவ நோயாளிகளுடைய காரணங்கள் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவுள்ள தன்மை சாப்பிடும் உணவில் அதிக புளி,அதிக காரம் ,கலப்படமான உணவுகள், சிறிய,சிறிய பிரச்சனைகளுக்கு,அதிகமாக ஆண்டி-பயோடிக் மருந்துகளை உபயோகிப்பது ,டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மெடிக்கலில் மருந்துகளை வாங்கி உபயோகிப்பது

எப்படி விஷ காய்ச்சல் மற்றவர்களுக்கு பரவுகிறது ?

கொசுக்கள் மூலம், வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் அவர்களுடைய எச்சில் ,சளி,மலம் போன்றவற்றில் தொற்று ஏற்பட்டு தும்முதல் ,இரும்புதல் மூலமாகவும் பரவலாம் . குடும்பத்தில் ஒருத்தருக்கு வைரஸ் காய்ச்சல் இருந்து மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு மிக எளிதாக பரவ வாய்ப்புள்ளது

விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ வழிமுறைகள்:

விஷ காய்ச்சல் பாதிப்பில் முதலில் கட்டுக்கடங்கா உடல் சூடும்,கை கால் உடல் முழுவதும் வலிகளையும்,சில மூட்டுகளில் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது நடக்க முடியாத அளவிற்கு வலிகளையும் ,கடுமையான சோர்வையும் ஏற்படுத்தும். எனவே முதலில் போதிய ஓய்வு எடுக்க வேண்டும், பசி இல்லாமல் சாப்பிடவே கூடாது சுட சுட வெந்நீர் மட்டுமே அடிக்கடி அருந்த வேண்டும். வீககமுள்ள மூட்டிற்கு வெந்நீர் பை கொண்டு மிதமாக ஒத்தடம் கொடுக்கலாம். சத்துள்ள உணவுகளை நீர் ஆகாரமாக சாப்பிடலாம். ஆனால் இந்த விஷ காய்ச்சல் டெங்கு காயச்சலாக இருக்கும் என சந்தேகம் வந்தால் ( உடலில் தடிப்புகள்,சிவந்த தோல் நிற
மாற்றம் …இடு போல ) உடனடியாக இரத்த பரி சோதனைகள் -இரத்த தட்டின் எண்ணிக்கை போன்றவைகளை எடுப்பது நல்லது காய்ச்சலை உடனே தணிக்க கூடிய ஊசி ,மாத்திரைகளை உடனே சாப்பிட்டால் அது வாத நீராக மாறி வாழ்நாள் முழுவதும் வலியுடன் வாழ வைத்திடும் . பொதுவாகவே வைரஸ் காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை.அசிவிர் (எ க்லோ வீர் ) என்னும் மாத்திரை தான் கொடுப்பார்கள்,அதுவும்இந்த காய்ச்சலுக்கு பயனே இல்லாத மருந்தாகும்.சிலர் ஆண்டி பயோ டிக் – ஒப்லோக்சின் போன்ற மருந்துகளை
கொடுப்பார்கள்-இதுவும் ஒரு கண் துடைப்பே அன்றி வேறில்லை. ட்ரிப்ஸ் ,வலி நிவாரண மாத்திரைகள் எல்லாமே வெறும் கண் துடைப்புதான்.காலை ஊசி ,மாலையிலும் ஊசி,நாலு பாட்டில் குளுக்கோஸ் எல்லாம் வீண்.இப்படி ராஜ வைத்யம் செய்தும்
ஐந்து முதல் பத்து நாட்கள் வரை கூட ஆகி கஷ்ட படுத்த தானே செய்கிறது ???,ஒரே ஊசியில் இதை சரி செய்ய முடிந்தால் செய்யட்டுமே ?? நான் பந்தயம் கட்டுகிறேன் ஒரு வேளை நில வேம்பு கசாயத்தில் விஷ காய்ச்சலின் தொந்தரவுகள் அனைத்துமே கட்டுக்கள் கொண்டு வந்து விட முடியும் .. ஆயுர்வேத மருந்துகளில்
விஷ காய்ச்சலுக்கு -அம்ருதாரிஷ்டம் -மஹா சுதர்சன மாத்திரை -வெட்டு மாறன் குடிகா -விஷம ஜ்வரான்குஷ ரசம் மாத்திரை -ஆம வாதரி கஷாயம் & மாத்திரை -சஞ்சீவனி குடிகா மாத்திரை இது போன்ற தேவைக்கேற்ற மருந்துகளை கொடுக்க சொல்கிறது பயப்படவே வேண்டாம்.சரியான, முறையான, பக்க விளைவுகள் இல்லாத
மருந்துகளையே உபயோகிங்கள்.இன்றைய நிவாரணம் விட நாளைய நோய் இல்லத வாழ்க்கையே நல்லது.அவசரம் மிகவும் ஆபத்து..

விஷ காய்ச்சலை எப்படி தடுப்பது ?…
ஆங்கில மருந்துகளில் இதற்க்கு தடுப்பு மருந்தோ ,ஊசியோ இல்லவே இல்லை .கண்டுபிடிக்கவே இல்லை.. அனால் ஹோமியோபதியில் இதற்க்கு தடுப்பு மருந்து உண்டு.. சுத்தமான குடிநீர்,கொசுவற்ற சூழ்நிலைகள் ,சத்தான ஆஹாரம் ,ஆயுர்வேதம் சொல்லும் வாழ்க்கை விதிகள் எல்லாம் இந்நோயை விரட்டும்

Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Post comment